/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.க., கூட்டணி தேர்தல் பணிமனை திறப்பு
/
தி.மு.க., கூட்டணி தேர்தல் பணிமனை திறப்பு
ADDED : மார் 28, 2024 04:38 AM

திருப்பூர், : திருப்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணி தலைமை தேர்தல் காரியாலயம் திறப்பு விழா நடந்தது.
திருப்பூர் தொகுதியில் தி.மு.க., கூட்டணி சார்பில் இ.கம்யூ., சுப்பராயன் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 25ம் தேதி அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் பகுதிவாரியாக நடந்தது. இந்நிலையில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ளும் வகையில் தலைமை தேர்தல் காரியாலயம், பி.என்., ரோடு நெசவாளர் காலனி பகுதியில் நேற்று திறக்கப்பட்டது.
இ.கம்யூ., மாநில செயற்குழு உறுப்பினர் ரவி வரவேற்றார். வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். அமைச்சர் சாமிநாதன் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். தி.மு.க., நகர செயலாளர்கள் தினேஷ்குமார், நாகராஜ் முன்னிலை வகித்தனர். வேட்பாளர் சுப்பராயன் உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டணி கட்சி நிர்வாகிகள், கிருஷ்ணன் (காங்.,) நாகராஜ் (ம.தி.மு.க.,) காமராஜ் (மா.கம்யூ.,) ரோபோ ரவி ( கொ.ம.தே.க.,) மூர்த்தி (வி.சி.க.,) உட்பட பலர் பங்கேற்றனர். இ.கம்யூ., மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
விழாவில், பங்கேற்றவர்களுக்கு டீ, 300 மி.லி., அளவு குடிநீர் பாட்டில் ஆகியன வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, தொழிற்சங்கம் சார்பில், சரக்கு ஆட்டோவில் சிலர் அழைத்து வரப்பட்டனர்.
---------------------------
திருப்பூர், பி.என்.,ரோட்டில், தி.மு.க., கூட்டணி தேர்தல் பணிமனையை, அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். அருகில், வேட்பாளர் சுப்பராயன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள். * திறப்பு விழாவுக்கு, பெண்களை சரக்கு வாகனத்தில் அழைத்து வந்தனர்.