தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மடத்துக்குளத்தை மீண்டும்  தி.மு.க., கைப்பற்றியது  

மடத்துக்குளத்தை மீண்டும்  தி.மு.க., கைப்பற்றியது  

மடத்துக்குளத்தை மீண்டும்  தி.மு.க., கைப்பற்றியது  


ADDED : மே 05, 2026 04:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 05, 2026 04:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: மடத்துக்குளம் தொகுதியில், தி.மு.க., மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

மடத்துக்குளம் தொகுதி, கடந்த, 2010ல் தொகுதி மறு சீரமைப்பின் போது உருவாக்கப்பட்ட தொகுதியாகும். தொகுதி உருவான, முதல் தேர்தல் 2011ல் நடந்தது. தொகுதிக்கான முதல் தேர்தலில், அ.தி.மு.க.,வை சேர்ந்த சண்முகவேலு வெற்றி பெற்றார்.

தொடர்ந்து, 2016ல் நடந்த தேர்தலில், தி.மு.க., ஜெயராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அடுத்து, 2021ல்  நடந்த தேர்தலில், அ.தி.மு.க.,வின் மகேந்திரன் வெற்றி பெற்றார்.

தற்போது நடந்த தேர்தலில், இரண்டாவதாக வெற்றி பெற்ற தி.மு.க., ஜெயராமகிருஷ்ணனும், முதல் தேர்தலில் வெற்றி பெற்ற, சண்முகவேலு, அ.ம.மு.க.,வேட்பாளராகவும் களம் கண்டனர்.

இத்தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கையில், தி.மு.க.,– அ.ம.மு.க., வேட்பாளர்கள் மாறி, மாறி முன்னிலை  பெற்ற நிலையில், இறுதி ஐந்து சுற்றுக்களுக்கு மேலாக, தி.மு.க.,முன்னிலை பெற்று, ஏறத்தாழ, 15 ஆயிரம் ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று, தி.மு.க.,வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.

அ.தி.மு.க.,– தி.மு.க., மாறி, மாறி வெற்றி பெற்று வரும் நிலையில், இம்முறை தி.மு.க., வசம் மடத்துக்குளம் தொகுதி சென்றுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us