ADDED : செப் 14, 2024 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, சமூக வலை தள பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
திருப்பூர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், அமைச்சர் கயல்விழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கட்சியின் முப்பெரும் விழாவில் குடும்பத்தோடு சென்று பங்கேற்பது; வீடு தோறும் கட்சிக் கொடியை ஏற்றி வைப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.