/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதிப்பெண் குறைந்தால் சோர்வு வேண்டாம்!
/
மதிப்பெண் குறைந்தால் சோர்வு வேண்டாம்!
ADDED : மார் 31, 2024 12:04 AM

'21ம் நுாற்றாண்டின் திறன்கள்' குறித்து மாற்றம் பவுண்டேஷன் இணை நிறுவனர் உதயசங்கர் பேசியதாவது:
கல்வி கற்கும் நாட்களில் படிப்பை தாண்டிய கூடுதல் திறமை வளர்த்துக் கொள்ள வேண்டும். படிப்பு நாட்களில், ஒழுக்கம் அவசியம். வாழ்வில் ஜெயிக்க ஒழுக்கமே உங்களுக்கு உதவும். பெற்றோர்களே எந்த சூழலிலும், உங்களின் ஆசைகளை குழந்தைகளிடம் திணிக்க கூடாது; கட்டாயப்படுத்த கூடாது.
படிப்பு விஷயத்தில், அவர்களது ஆசைகளுக்கு வாய்ப்பு கொடுங்கள். மாணவ, மாணவியர் உங்களை உருவாக்கிய ஆசிரியர்களிடம் உங்களை பற்றிக் கேளுங்கள். படிப்பு, வேலைவாய்ப்பு குறித்த விரிவான தேடல் அவசியம். சிறந்த, வேலைவாய்ப்பு தரும் படிப்பை தேர்ந்தெடுங்கள்; பெற்றோர் மகிழ்ச்சி அடைவர்.
படிப்பில், ஆண், பெண் வேறுபாடு பார்க்க வேண்டாம். பெண்கள் ஆளுமை இல்லாத துறைகளே இல்லை என்ற நிலை வந்துள்ளது. மாணவியர் உயர்படிப்புக்கு தடையே இருக்க கூடாது. ஒவ்வொருவருக்கும் மதிப்பெண்ணுக்கு ஏற்ற கல்லுாரி கட்டாயம் கிடைக்கும். மதிப்பெண் குறைவு என சோர்ந்து போக வேண்டாம். நல்ல பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். குடும்ப சூழ்நிலையை மாற்ற, உங்களது கல்வி வழிவகுக்கும்.

