/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தக் கூடாது! உரம் விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை

ADDED : செப் 03, 2024 01:44 AM
திருப்பூர்;'உர விற்பனையாளர்கள், செயற்கை உர தட்டுப்பாடு ஏற்படாத வகையில், நடந்து கொள்ள வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணவேணி அறிக்கை:
'ராபி' பருவத்துக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் சில்லரை விற்பனை நிலையங்கள் மற்றும் அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் உரங்கள் இருப்பு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது, திருப்பூர் மாவட்டத்தில், யூரியா, 1,615 மெட்ரிக் டன்; டி.ஏ.பி., 962 மெட்ரிக் டன்; பொட்டாஷ், 1,022 மெட்ரிக் டன்; சூப்பர் பாஸ்பேட், 665 மெட்ரிக்., டன் மற்றும் காம்ப்ளக்ஸ், 5,002 மெட்ரிக் டன் உரம் இருப்பு உள்ளது.
'அனைத்து உர விற்பனையாளர்களும் விற்பனை முனை இயந்திரம் வாயிலாக மட்டுமே உரங்கள் விற்பனை செய்ய வேண்டும். விற்பனை விலைக்கு மிகாமல், வினியோகம் செய்ய வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வட்டார அளவில் உள்ள உர விற்பனை நிலையங்களிலும், வேளாண்மை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, தர பரிசோதனைக்காக உர மாதிரி களை ஆய்வகத்திற்கு அனுப்பி வருகின்றனர்.
உர விற்பனையில், எந்தவித செயற்கை உரதட்டுப்பாடும் ஏற்படா வண்ணம் கண்காணிக்கிறோம். விதிமீறும் உர விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.