/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு தந்த விளையாட்டு உபகரணங்கள் இளைஞர்கள் பயன்படுத்துகின்றனரா?
/
அரசு தந்த விளையாட்டு உபகரணங்கள் இளைஞர்கள் பயன்படுத்துகின்றனரா?
அரசு தந்த விளையாட்டு உபகரணங்கள் இளைஞர்கள் பயன்படுத்துகின்றனரா?
அரசு தந்த விளையாட்டு உபகரணங்கள் இளைஞர்கள் பயன்படுத்துகின்றனரா?
ADDED : மார் 10, 2025 12:33 AM
திருப்பூர்; கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை இளைஞர்கள் பயன்படுத்துகின்றனரா என்று கள ஆய்வு துவங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த, கிராம ஊராட்சிகளுக்கு, விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.
'ஒவ்வொரு ஊராட்சியிலும் விளையாட்டு மன்றம் அமைக்க வேண்டும். ஊராட்சித் தலைவர், செயலர், வி.ஏ.ஓ., பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் உறுப்பினராக இருக்க வேண்டும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள இளைஞர்கள், தங்களை ஊராட்சி குழு உறுப்பினர்களாக பதிவு செய்து, விளையாட்டு உபகரணங்களைப் பெற்று, பயிற்சியில் ஈடுபடலாம். பயிற்சி மேற்கொண்ட பின்னர், உபகரணங்களை முறையாக ஒப்படைக்க வேண்டும்,' என, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
விளையாட்டு உபகரண தொகுப்பு பயன்படுத்தப்படுகிறதா, இளைஞர் ஆர்வமுடன் வாங்கி பயிற்சி பெறுகின்றனரா, ஊராட்சி அளவில் அமைக்கப்பட்ட விளையாட்டு மன்றம், குழுக்களின் செயல்பாடு எப்படி என்பது குறித்து கள ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, திருப்பூர் மாவட்டத்தில், இதற்கான கள ஆய்வு தீவிரமடைந்துள்ளது.