நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர், தட்டான் தோட்டம், ஸ்ரீ கலைமகள் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், மருத்துவர் தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி முதல்வர் காயத்ரி வரவேற்றார். பள்ளி தாளாளர் ராமசாமி தலைமை வகித்தார். டாக்டர் அழகேந்திரா பங்கு பெற்று, சித்த மருத்துவம் சார்ந்த கருத்துக்கள், அதன் நன்மை குறித்து பேசினார். பள்ளியின் செயலர் சண்முகசுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.