/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேவதி மருத்துவமனையில் மருத்துவர்கள் தின விழா
/
ரேவதி மருத்துவமனையில் மருத்துவர்கள் தின விழா
ADDED : ஜூலை 02, 2024 01:44 AM

திருப்பூர்;தேசிய மருத்துவர்கள் தினத்தை திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டரில் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில், கலெக்டர் கிறிஸ்துராஜ், தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். ரேவதி மெடிக்கல் சென்டரின் தலைவர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். பங்கேற்ற டாக்டர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது.
ரேவதி மெடிக்கல் சென்டரின் இணை இயக்குநர் ரேவதி, டாக்டர் விஷ்ணு ராகவ் ஆகியோர் மருத்துவர்களை வாழ்த்தி பேசினர்.
செவிலியர் தலைவர் டாக்டர் கற்பகம், டாக்டர்கள் நாகராஜ், ஹர்ஷா நாராயணன், அக் ஷயா, சிவக்குமார், சந்தோஷ், அருண்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
எம்.எல்.ஏ., செல்வராஜ் பேசுகையில், ''சில ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில் பல்துறை சிகிச்சைகள் வழங்குவதற்கு பெரிய அளவில் மருத்துவ வசதிகள் இல்லாமல், நோயாளிகள் மிகுந்த சிரமப்பட்டு, கோவைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.
தற்போது, கோவைக்கு இணையாக திருப்பூரிலும் அனைத்து மருத்துவ வசதி களும், சிறப்பு மருத்துவ நிபுணர்களும் கொண்ட மருத்துவ சேவையை நோயாளிகள் பெறுகின்றனர்,'' என்றார்.