/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துரத்தி துரத்தி கடிக்கும் நாய்கள்; அச்சத்தின் உச்சியில் பொதுமக்கள்
/
துரத்தி துரத்தி கடிக்கும் நாய்கள்; அச்சத்தின் உச்சியில் பொதுமக்கள்
துரத்தி துரத்தி கடிக்கும் நாய்கள்; அச்சத்தின் உச்சியில் பொதுமக்கள்
துரத்தி துரத்தி கடிக்கும் நாய்கள்; அச்சத்தின் உச்சியில் பொதுமக்கள்
ADDED : ஆக 01, 2024 01:21 AM

அவிநாசி : திருமுருகன்பூண்டி நகராட்சியில், 4 மற்றும் 5வது வார்டுக்குட்பட்ட எம்.ஜி.ஆர்., மற்றும் என்.எஸ்.பி., நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நேற்று 50க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அதன்பின், நகராட்சி ஆணையர் கனிராஜ் (பொறுப்பு) மற்றும் நகராட்சி தலைவர் குமார் ஆகியோரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. தினமும் காலை மாலை வேலைகளில் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என நடைப்பயிற்சி செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறது.
குறிப்பாக, 50க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக ஒன்று சேர்ந்து நடைப்பயிற்சி செல்பவர்களை குறி வைத்து துரத்தி கடிக்கிறது. குழந்தைகளையும் வாகனத்தில் செல்பவர்களையும் துரத்துகிறது. வீட்டிலிருந்து வெளியில் விளையாட வந்த ஒரு சிறுமியை பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சூழ்ந்து கொண்டு கடிக்க பாய்ந்தது.
அருகில் இருந்த முதியவர் சிறுமியை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவரையும் நாய்கள் கடிக்கப் பாய்ந்தன. அவர் கீழே விழுந்து கை காலில் பலத்த காயம் ஏற்பட்டது. நாய்களை கட்டுப்படுத்தவும், நடைப்பயிற்சி செய்வதற்கும், இரவு நேரங்களில் வேலை முடிந்து அச்சம் இல்லாமல் வீட்டிற்கு வருவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு, அதில் கூறியுள்ளனர்.