/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆபர் கம்ப்யூட்டர் பயிற்சிகளில் சேர்ந்து ஏமாறாதீங்க! மாணவர்களுக்கு அறிவுரை
/
ஆபர் கம்ப்யூட்டர் பயிற்சிகளில் சேர்ந்து ஏமாறாதீங்க! மாணவர்களுக்கு அறிவுரை
ஆபர் கம்ப்யூட்டர் பயிற்சிகளில் சேர்ந்து ஏமாறாதீங்க! மாணவர்களுக்கு அறிவுரை
ஆபர் கம்ப்யூட்டர் பயிற்சிகளில் சேர்ந்து ஏமாறாதீங்க! மாணவர்களுக்கு அறிவுரை
ADDED : ஏப் 12, 2024 10:26 PM
உடுமலை:விடுமுறையையொட்டி, சிறப்பு ஆபரில் கம்ப்யூட்டர் பயிற்சி அளிப்பதாக கூறும் மையங்களில் சேர்வதற்கு முன்பு, விழிப்புணர்வுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக உள்ளனர். இதில் பலரும், பல்வேறு பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து படித்தவர்களாக உள்ளனர்.
பெரும்பான்மையான மாணவர்கள், பள்ளி பருவத்தில் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றிருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் இன்றைய சூழலில், அடிப்படையான கம்ப்யூட்டர் பயிற்சி கட்டாயம் தேவை என, மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மொபைல் போன் வாயிலாகவே, பயிற்சி கற்றுக்கொள்வதற்கும் முயற்சி செய்கின்றனர். இதை பயன்படுத்தி, பல தனியார் மையங்களும் மாணவர்களை அணுகுகின்றனர்.
மாணவர்களின் மொபைல் எண்களை அறிந்துகொண்டு, பள்ளியிலிருந்து பெற்றதாக தெரிவித்து, சிறப்பு பயிற்சி வழங்குவதாக கூறி சேர்க்கை நடத்துகின்றனர்.
ஆனால் மாணவர்கள் மையங்களில் சேர்ந்த பின், தரமான அடிப்படை பயிற்சி வழங்கப்படுவதில்லை. மேலும் மிக குறுகிய நாட்களுக்கு, மிக அதிகமான தொகையை செலுத்த, மாணவர்களை அறிவுறுத்துகின்றனர். மாணவர்களும் ஆர்வமிகுதியால், தொகையை செலுத்திவிட்டு பின் வருத்தப்படுகின்றனர்.
பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'எந்த மையத்தில் என்ன பயிற்சி என விளக்கமாக நேரில் சென்று விசாரிக்க வேண்டும். இதுகுறித்து அனுபவமுள்ள பெற்றோர் அல்லது வேறு நபரை அழைத்து, பயிற்சி பற்றி அறிந்து கொண்டு பின்னர் சேரலாம்' என்றனர்.

