/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஓட்டுக்கு நோட்டு வாங்கக்கூடாது'
/
'ஓட்டுக்கு நோட்டு வாங்கக்கூடாது'
ADDED : மார் 25, 2024 12:49 AM

திருப்பூர்;தேர்தல் பிரிவு அதிகாரிகள், திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் (அலகு -2) சார்பில், தேர்தல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி, பி.என்., ரோட்டில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மகேஸ்வரன் தலைமை வகித்தனர். மாவட்ட கலால்துறை மேற்பார்வை அலுவலர் கனிமொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
மாணவ செயலர்கள் ராஜபிரபு, விஜய், செர்லின், மது கார்த்திக், ஜெயசந்திரன் தலைமையில் மாணவ, மாணவியர், 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும், ஓட்டுக்கு நோட்டு வாங்க கூடாது; ஓட்டு போடுவது கடமை என்பதை வலியுறுத்தி பிரசாரம் செய்தனர். நாடகம் நடித்து, நடமானமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர். வி.ஏ.ஓ.,க்கள் அம்சவேணி, மகேஷ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

