sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சந்தேகங்கள் போயே போச்சு; எளிதாகும் இனி கவுன்சிலிங்

/

சந்தேகங்கள் போயே போச்சு; எளிதாகும் இனி கவுன்சிலிங்

சந்தேகங்கள் போயே போச்சு; எளிதாகும் இனி கவுன்சிலிங்

சந்தேகங்கள் போயே போச்சு; எளிதாகும் இனி கவுன்சிலிங்


ADDED : ஜூலை 07, 2024 11:54 PM

Google News

ADDED : ஜூலை 07, 2024 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர், மாணவர்கள், ''இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த அனைத்து சந்தேகங்களும் தீர்ந்தது'' என்று மகிழ்ச்சிபொங்க தெரிவித்தனர்.

சிறந்த வழிகாட்டி பெற்றோர் பாராட்டு


வடிவு, வீரபாண்டி: ஆன்லைன் கவுன்சிலிங்கில் என்னென்ன வழிமுறை பின்பற்ற வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. அவசரமில்லாமல் நிதானமாக, கல்லுாரிகளை ஒன்றுக்கு, இரண்டு முறை யோசித்து தேர்வு செய்யவும், எத்தனை கல்லுாரி உள்ளது என்பதை அறிந்து கொள்ளவும் நிகழ்ச்சியில் ஆலோசனை வழங்கப்பட்டது பயனுள்ளதாக இருந்தது.

தமிழரசி, பல்லடம்: விளம்பரங்களை கடந்தும், கல்லுாரி தேர்வில் இவ்வளவு விஷயங்கள் உள்ளது. அதைப் பெற்றோரும், மாணவரும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். கல்லுாரி தேர்வு செய்து, சரியான நேரத்துக்கு கல்லுாரிகளில் இணையவில்லையென்றால் என்ன நேரிடும் என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

மோகன்குமார், மங்கலம்: படிப்பை தாண்டி வேலைவாய்ப்புக்கான திறமைகளை வளர்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்; போட்டித்தேர்வுகளில் கவனம் செலுத்தினால், நமக்கு உதவ காத்திருக்கும் வேலைவாய்ப்பு குறித்து விரிவாக விளக்கப்பட்டது. பெற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் நிறைய உள்ளது. நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

குணசேகரன், எஸ்.ஆர்., நகர்: அரசு, தனியார் கல்லுாரிகள் இடையே உள்ள கட்டண வேறுபாடுகள், ஒவ்வொரு கல்லுாரியிலும் படிப்பு மற்றும் பயிற்சிக்கு வழங்கப்படும் காலம், அதை மாணவர் அறிந்து கொண்டு, கல்லுாரியை தேர்வு செய்ய வேண்டும் என விளக்கம் அளித்தது பயனுள்ளதாக இருந்தது.

சுபத்ரா, கொங்கு நகர்: என் மகன் பிளஸ் 2 படிக்கிறார். இன்ஜி., படிப்பில் ஆர்வமாக உள்ளார். கவுன்சிலிங் விபரத்தை இப்போது அறிந்து கொள்ள அழைத்து வந்திருந்தேன். அடுத்த ஆண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று, இன்ஜி., கவுன்சிலிங் இணைய, இப்போதே விபரங்களை அறிந்து கொண்டேன். 'தினமலர்' நடத்தும் இந்நிகழ்ச்சி பெற்றோருக்கும் வழிகாட்டுவதாக உள்ளது.

பயன் பெற்றோம் மாணவர் மகிழ்ச்சி


பிரபஞ்சன், காங்கயம்: அண்ணா பல்கலையின் கீழ் இணைப்பு மற்றும் உறுப்பு கல்லுாரிகளாக உள்ளவற்றின் செயல்பாடுகள், கவுன்சிலிங் மற்றும் அட்மிஷன் நடைமுறைகளில் நிறைய குழப்பங்கள் எனக்கு இருந்தது. மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் நாகராஜன் கூறிய விஷயங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

ஆர்த்தி, கொடுவாய்: தரவரிசைப்பட்டியல் வெளியானதும், ரேங்க், கட் ஆப் மதிப்பெண்ணுக்கு ஏற்றவாறு எவ்வாறு கல்லுாரிகள் பிரிக்கப்படுகிறது; ஏன் கூடுதல் கல்லுாரிகளை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கு சரியான விளக்கம், பதில் கிடைத்தது. தடுமாற்றம் இல்லாமல் கவுன்சிலிங்கில் பங்கேற்பேன்.

சிபி அரசி, சிவன்மலை: இணையதளம், 'யூ டியூப்' சேனல் மூலம் கவுன்சிலிங் குறித்த தகவல்களை அவ்வப்போது தெரிந்து கொண்டாலும், கவுன்சிலிங் துவங்கி, அட்மிஷன், கல்லுாரி தேர்வு, படிப்பது, வேலைவாய்ப்பு பெறுவது வரை அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி மூலம் கிடைத்தது; பயனுள்ளதாக இருந்தது.






      Dinamalar
      Follow us