/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கள் தடை நீடிக்க காரணம் திராவிடக்கட்சிகள் தான்'
/
'கள் தடை நீடிக்க காரணம் திராவிடக்கட்சிகள் தான்'
UPDATED : ஜூலை 06, 2024 03:09 AM
ADDED : ஜூலை 05, 2024 11:57 PM

பல்லடம்;''கள்ளுக்கான தடை நீடிக்க திராவிடக்கட்சிகள்தான் காரணம்'' என்று கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயல்தலைவர் வெற்றி கூறினார்.
கடந்த, 1972ம் ஆண்டு மின் கட்டண உயர்வுக்காக போராடி உயிர் நீத்த விவசாயிகளின் நினைவு ஸ்துாபியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த கே.அய்யம்பாளையம் கிராமத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மாநில செயல் தலைவர் வெற்றி கூறியதாவது:
அன்று, மின் கட்டண போராட்டத்துக்காக உயிரிழந்த விவசாயிகளால்தான், இன்று 30 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய மின் இணைப்புகள் கிடைக்கப்பெற்று விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் மட்டும் தான் கள்ளுக்கான தடை, கடந்த 30 ஆண்டுகளாக உள்ளது. கள் ஒரு உணவு பொருள். இதனால், இதுவரை யாரும் உயிரிழந்ததில்லை. கள்ளுக்கு தடை நீடித்து வருவதற்கு தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு திராவிட கட்சிகளின் சுயநலமே காரணம். இதனால், பல லட்சம் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் சீர்குலைந்து வருகிறது. கள்ளுக்கான தடையை நீக்குதல், ஆனைமலை -- நல்லாறு திட்டத்தை செயல்படுத்துதல் ஆகிய விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு, வெற்றி கூறிானர்.