ADDED : ஜூன் 13, 2024 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:குடிசைகளில் வசிப்போருக்காக, 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், வீடு கட்ட, 3.50 லட்சம் ரூபாய் தொகை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக ஊராட்சி தலைவர், ஒன்றிய உதவி பொறியாளர், ஊராட்சி வார்டு உறுப்பினர் போன்றோரை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
'தினசரி தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் விவரத்தை, அன்றைய தினம் மாலையே சமர்ப்பிக்க வேண்டும்' என, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, ஊரக வளர்ச்சி முகமை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.