/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் கேன்: விதிமுறையை பின்பற்றுங்க!
/
குடிநீர் கேன்: விதிமுறையை பின்பற்றுங்க!
ADDED : மே 03, 2024 11:10 PM
- நமது நிருபர் -
குடிநீர் பாட்டில்கள் மற்றும் குடிநீர் கேன்களில் தயாரிப்பு, காலாவதி தேதி இருப்பதுடன், தண்ணீர் தெளிவாகத் தெரியும் வகையிலான கேன்களை மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை
கூறியதாவது: பேக்கிங் செய்யப்பட்ட உணவு பண்டங்களில் தயாரிப்பு, காலாவதி தேதி, தயாரிப்பாளர்களின் முழு முகவரி ஆகியவை இடம்பெற வேண்டும். பழச்சாறு தயாரிக்க தரமான பழங்களையும், தரமான குடிநீரால் தயாரிக்கப்பட்ட ஐஸ் ஆகியவற்றையும் பயன்படுத்த வேண்டும்.
குடிநீர் பாட்டில்கள் மற்றும் குடிநீர் கேன்களில் தயாரிப்பு, காலாவதி தேதி இருப்பதுடன், தண்ணீர் தெளிவாகத் தெரியும் வகையிலான கேன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மிகவும் பழைய கேன்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.