/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் கோபுரத்தில் ஏறிய 'குடி'மகன்
/
மின் கோபுரத்தில் ஏறிய 'குடி'மகன்
ADDED : ஜூன் 11, 2024 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;ஊத்துக்குளி தாலுகா, காவுத்தம்பாளையம் கிராமம், மஜரா வாமலை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ், 50 குடிபோதையில் நேற்று, மதியம் 1:45 மணி அளவில், வாமலை கவுண்டம்பாளையத்தில் உள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறிவிட்டார்.
குன்னத்துார் போலீசார், அவரை கீழே இறங்குமாறு கூறினர். போதை தலைக்கேறிய சுரேஷ், இறங்க மறுத்து அடம்பிடித்தார்.
ஒருமணி நேரம் போலீசார் செய்த சமாதானம் காரணமாக, சுரேஷ் கீழே இறங்கினார். போலீஸ் விசாரணையில், மனைவி பிரிந்த சென்ற துக்கத்தில், மின் கோபுரத்தின் மீது ஏறியதாக கூறிய சுரேஷை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.