/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சீறிப்பாய்ந்த நாய் தெறித்த 'குடி'மகன்கள்
/
சீறிப்பாய்ந்த நாய் தெறித்த 'குடி'மகன்கள்
ADDED : ஜூலை 02, 2024 01:48 AM
திருப்பூர்:திருப்பூரில், மதுக்கடைக்கு ஆட்டோ டிரைவர் அழைத்து சென்ற வளர்ப்பு நாய் சீறிப்பாய்ந்ததால், 'குடி'மகன்கள் தெறித்து ஓடினர். ரோட்டில் சென்ற, இருவரையும் கடித்தது.
திருப்பூர், கொங்கு மெயின் ரோடு இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகில் 'டாஸ்மாக்' மதுக்கடைக்கு நேற்று மதியம் ஆட்டோ டிரைவர் ஒருவர், மது அருந்த சென்றார். உடன், தனது வீட்டு வளர்ப்பு நாயை அழைத்து வந்தார். மது அருந்தும் போது, நாயை கட்டி போட்டு விட்டு மது அருந்தினர்.
கடைக்கு வரும் 'குடி'மகன்கள் கூட்டத்தை பார்த்து, பயந்த நாய், கட்டை அவிழ்த்து கொண்டு உள்ளே இருந்தவர்களை கடிக்க சீறிப்பாய்ந்தது. இதனால், தெறித்து ஓடிய 'குடி'மகன்கள், நாயை வெளியே தள்ளி கதவை சாத்தினர். வெளியே சென்ற நாய் ரோட்டில் சென்ற ஒருவரையும், மது வாங்க வந்த ஒருவரையும் கடித்தது. பின் பொதுமக்கள் உதவியுடன் நாய் பிடிக்கும் நபர்களை அழைத்து வந்து, நாயை பிடித்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது