/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லாபுரம் பகுதியில் உலர் களம் தேவை
/
கல்லாபுரம் பகுதியில் உலர் களம் தேவை
ADDED : மார் 29, 2024 10:34 PM
உடுமலை:அமராவதி மற்றும் கல்லாபுரம் வாய்க்கால் பாசனப்பகுதிகளில், நெல் சாகுபடி பிரதானமாக உள்ளது. ஆனால், நெல்லை காய வைக்க தேவையான உலர் கள வசதி பெரும்பாலான இடங்களில் இல்லை.
கல்லாபுரம் பகுதி விவசாயிகள், கடந்த சீசனில், நெற்பயிர்களை அறுவடை செய்த பின்னர், அவற்றை அமராவதி பாலத்தின் மீதுள்ள ரோட்டில், காய வைத்தனர். விலை வீழ்ச்சி காலங்களில், நெல்லை இருப்பு வைக்கவும் போதிய வசதிகளில்லை.
விவசாயிகள் கூறுகையில், 'கல்லாபுரம் பகுதியில், வேளாண் விற்பனை வாரியத்தின் வாயிலாக உலர் களம் மற்றும் ஊரக கிடங்குகளை அமைக்க வேண்டும். கிடங்கு இல்லாததால், விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. உலர்களம் இருந்தால், நெல்லை காய வைத்து இருப்பு வைக்க வசதியாக இருக்கும். விலை கிடைக்கும் வரை, நெல்லை இருப்பு வைத்து விற்பனை செய்யலாம்,' என்றனர்.

