/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூண்டி பெருமாள் கோவிலில் துவாரபாலகர் தான்யாதி வாசம்
/
பூண்டி பெருமாள் கோவிலில் துவாரபாலகர் தான்யாதி வாசம்
பூண்டி பெருமாள் கோவிலில் துவாரபாலகர் தான்யாதி வாசம்
பூண்டி பெருமாள் கோவிலில் துவாரபாலகர் தான்யாதி வாசம்
ADDED : மே 30, 2024 04:56 AM

அவிநாசி : அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், ஜூன் 16ம் தேதி நடக்கிறது.
இதற்காக கோவிலில் மூலவர் சன்னதி முன் வைப்பதற்காக புதிதாக செய்யப்பட்ட ஜெயன், விஜயன் துவார பாலகர்கள் ஐந்து அடி உயரத்தில் செய்யப்பட்டு நேற்று கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது; தான்யாதிவாசத்தில் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.
துவார பாலகர்கள் சிலையை, உபயதாரர் திருமுருகன் குமாரவேல் சிற்பக்கலை கூடத்தினர் வடிவமைத்திருந்தனர்.
திருவடித் திருத்தொண்டு அறக்கட்டளை நிறுவனர் 'சவுமீஸ்' நடராஜன், பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் ராமசாமி, சேக்கிழார் புனிதர் பேரவை ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் விமலா, அறங்காவலர் குழு தலைவர் ராமநாதன், அறங்காவலர்கள் பாலகிருஷ்ணன், சென்னியப்பன், உமா காளீஸ்வரி, பழனிசாமி, திருமுருகநாதர் சுவாமி அறக்கட்டளையினர், சிவாச்சாரியார்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.