ADDED : மார் 07, 2025 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் பேசியதாவது: இ-காமர்ஸ் வாயிலாகஏற்றுமதி செய்வது, நாட்டின் ஏற்றுமதி துறையின் எதிர்கால வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கப்போகிறது. தமிழக ஏற்றுமதியாளர்கள் இ-காமர்ஸ் மூலம் தங்கள் வரம்பை விரிவுபடுத்துவதற்கான குறிப்பிடத்தக்க படியாகும்.
அமேசான், திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு போன்ற முக்கியமான நகரங்களின் ஆடை உற்பத்தி மையங்கள், புதிய சந்தையை கைப்பற்றவும், உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு இந்திய ஆடைகளை கொண்டு சேர்க்கவும் கைகொடுக்கிறது. தரமான பொருட்களை சரியான நேரத்தில் கிடைக்கச் செய்வதன் மூலம், வாங்குபவர்கள் - விற்பனை செய்வோர் இருவருக்கும் வெற்றிகரமான சூழல் உருவாகிறது. தமிழக அரசும், இ-காமர்ஸில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.