/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழந்தைகள் சிறப்பாக படித்து முடிக்க பொருளாதாரம்; தடையாகக்கூடாது
/
குழந்தைகள் சிறப்பாக படித்து முடிக்க பொருளாதாரம்; தடையாகக்கூடாது
குழந்தைகள் சிறப்பாக படித்து முடிக்க பொருளாதாரம்; தடையாகக்கூடாது
குழந்தைகள் சிறப்பாக படித்து முடிக்க பொருளாதாரம்; தடையாகக்கூடாது
ADDED : செப் 16, 2024 12:18 AM

சிறுபூலுவப்பட்டி காவேரி நகரை சேர்ந்தவர் விருத்தாச்சலம், 35; மனைவி தமிழ்ச்செல்வி, 31; பனியன் தொழிலாளர்கள். தம்பதியருக்கு வெற்றி வீரன் 8, தஸ்வந்த், 3, என இரு மகன்கள்.
விருத்தாசலம், நம்முடன் பகிர்ந்தவை: சொந்த ஊர் திருவண்ணாமலை. இருவரும் காலை 8:30 மணிக்கு வேலைக்கு செல்வோம். மாலை 5:30 மணிக்கு மனைவி வீட்டுக்கு சென்று விடுவார். நான் ஓவர் டைம் பார்த்து வீட்டுக்கு செல்வேன்.
இருவரும் வேலைக்கு செல்வதால், குழந்தையை பார்க்க முடியாத நிலை. மூத்த மகன் என் அம்மா வீட்டில் விட்டுள்ளேன். அங்கு அவன் படித்து வருகிறான். இளைய மகனை வேலை செய்யும் கம்பெனிக்கு அழைத்து சென்று விடுவோம். நாங்கள் இருவரும் வாரம் எட்டு ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சம்பாதிப்போம். வீட்டு வாடகை 3 ஆயிரம் ரூபாய்; அம்மா வீட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் அனுப்புவேன்.
வருமானத்தில் ஊரில் சொந்த வீடு கட்டி உள்ளேன். விவசாய நிலம் வாங்கி உள்ளேன். ஞாயிற்றுக்கிழமையும் வேலைக்கு செல்வேன்.
இன்று படிப்புதான் முக்கியம். எனக்கு படிப்பின் அவசியம் குறித்து கூற ஆள் இல்லாததால், நான் போதிய அளவு படிக்கவில்லை. பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும்.
அதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது. சேமிப்பு முக்கியமாக உள்ளது.
பொழுதுபோக்காக பூங்கா மற்றும் கோவிலுக்கு செல்வோம்.

