/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டிரைவர் குடும்பத்துக்கு கல்வி அமைச்சர் ஆறுதல்
/
டிரைவர் குடும்பத்துக்கு கல்வி அமைச்சர் ஆறுதல்
ADDED : ஜூலை 26, 2024 11:44 PM

திருப்பூர்;மாரடைப்பு ஏற்பட்ட போதும், பள்ளி பஸ்ைஸ ஒரமாக நிறுத்தி, பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய, பள்ளி பஸ் டிரைவர் வீட்டுக்கு சென்று, கல்வித்துறை அமைச்சர் மகேஷ், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
காங்கயம், கே.பி.சி., நகரை சேர்ந்தவர் சேமலையப்பன், 48. அய்யனுார் அருகே தனியார் பள்ளி ஒன்றில் பஸ் டிரைவராக இருந்தார். கடந்த, 24ம் தேதி மாலை பள்ளி குழந்தைகளை வேனில் அழைத்து சென்ற போது, மாரடைப்பு ஏற்பட்டது. சாலையோரத்தில் பஸ்சை நிறுத்தி, குழந்தைகளின் உயிரைக் காத்த சேமலையப்பன் ஸ்டியரிங்கில் சாய்ந்தவாறு அப்படியே இறந்தார்.
இதையறிந்த, கல்வித்துறை அமைச்சர் மகேஷ், நேற்று மாலை, காங்கயம், சத்யா நகரில் உள்ள சேமலையப்பன் வீட்டுக்கு சென்று, அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் தெரிவித்து, அவரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.