/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., வாய்க்காலில் கார் கவிழ்ந்து முதியவர் பலி
/
பி.ஏ.பி., வாய்க்காலில் கார் கவிழ்ந்து முதியவர் பலி
பி.ஏ.பி., வாய்க்காலில் கார் கவிழ்ந்து முதியவர் பலி
பி.ஏ.பி., வாய்க்காலில் கார் கவிழ்ந்து முதியவர் பலி
ADDED : மார் 03, 2025 05:15 AM
திருப்பூர் : திருப்பூரை சேர்ந்தவர் சோழபாண்டி, 72; சண்முகம், 65, தணிக்காசலம், 25, சின்ன முனியப்பன், 40, சுப்ரமணி, 60 மற்றும் டிரைவர் ஜீவானந்தம், 25 ஆகியோருடன் வாடகை காரில் திண்டுக்கல் அருகே நண்பரின் மகன் திருமண விழாவுக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
11:00 மணியளவில் ஊதியூர் அருகே வந்தபோது, தாராபுரம் - திருப்பூர் ரோட்டில் வஞ்சிபாளையம் பிரிவு அருகே கட்டுப்பாட்டை இழந்து கார் ரோட்டோரம் இருந்த பி.ஏ.பி., வாய்க்காலில் கவிழ்ந்தது. அதில், சோழபாண்டி பரிதாபமாக இறந்தார். சோழபாண்டி, கணக்காளராக பணிபுரிந்து வந்தார். மற்றவர்களை மீட்டு திருப்பூர், கோவையில் தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.