ADDED : மார் 11, 2025 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி, குமரன் நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி, 60. கடந்த, 8ம் தேதி மாலை இவர் தனது பேத்தியை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக டூவீலரில் சென்றார்.
சேலம் - பைபாஸ் ரோடு ஓடக்காடு பிரிவு அருகே டூவீலரில் சென்ற போது, அவ்வழியாக வந்த மற்றொரு டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.