/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தபால் உறைகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம்
/
தபால் உறைகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம்
ADDED : ஏப் 14, 2024 12:27 AM

திருப்பூர்:ஓட்டளிப்பதன் அவசியத்தை அனைத்து வழி களிலும் வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் தேர்தல் கமிஷன் தீவிரம் காட்டி வருகிறது.
தபால் நிலையங்களில் கடிதங்களை அனுப்பி வைக்கும் தபால் உறைகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களை முத்திரையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் தபால் கோட்ட அலுவலகம், தாராபுரம், மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் தலைமை தபால் அலுவலகங்கள், 80க்கும் மேற்பட்ட துணை தபால் அலுவலகங்கள், 100க்கும் அதிகமான கிளை தபால் அலுவலகங்களில் இருந்து விரைவு தபால், பதிவு தபால், மணியார்டர், கடிதம், பார்சல்கள் உள்ளிட்ட பிற மாவட்டம், வெளியூர், உள்ளூர் செல்லும் தபால் உறைகள் என அனைத்திலும், 'தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா, மக்களவை தேர்தல் 2024' என தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை அச்சிடப்பட்டுள்ளது.
தபால் துறையினர் கூறுகையில், 'மாவட்டத்தில் தினமும் 25 முதல், 30 ஆயிரம் தபால் உறைகள் பயணிக்கின்றன. இவை அனைத்திலும் தேர்தலில் ஓட்டளிப்பதன் அவசியம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான வாசகங்கள் ரப்பர் ஸ்டாம்ப் பிரின்ட் செய்யப்பட்டுள்ளது.
இதனை படிக்கும் ஒவ்வொருவரிடம் ஓட்டளிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க வேண்டும் என்பதற்கான முயற்சி இது,' என்றனர்.

