/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர் பேரவை நிர்வாகிகள் தேர்வு
/
மாணவர் பேரவை நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜூன் 17, 2024 12:00 AM
திருப்பூர்:திருப்பூர், கூலிபாளையம், வித்யாசாகர் இன்டர்நேசனல் பப்ளிக் பள்ளியில் மாணவர் பேரவை மற்றும் அணிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
இப்பள்ளியில் 2024- 25 ம் கல்வியாண்டுக்கான மாணவர் பேரவை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் மாணவர் தலைவராக வீரவினோதினி; துணை தலைவராக சஹானா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், லுாசியன் அணி, ரீசியன்ஷ் அணி, ஹாப்லிங்கர்ஸ் அணி, வார்லேண்டர்ஷ் அணி ஆகியவற்றுக்கு தலைவர் மற்றும் துணை தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வான நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்று பொறுப்பேற்றனர்.
மாணவர் அணி நிர்வாகிகளுக்கு பள்ளி செயலாளர் சிவப்ரியா மாதேஸ்வரன், பள்ளி முதல்வர் சசிரேகா பாலசுப்ரமணியம் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பள்ளியில் 11ம் வகுப்பில் இணைந்துள்ள மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.