ADDED : ஜூன் 26, 2024 10:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மின் கோட்டம், வீரபாண்டி உபகோட்டம் சார்பில், மின் பாதுகாப்பு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இடுவம்பாளையம் திருமண மண்டபத்தில் நடந்த முகாமிற்கு, மேற்பார்வை பொறியாளர் ஜோதிலட்சுமி தலைமை வகித்தார்.
உதவி செயற்பொறியாளர் டேனிஷ் வேணு முன்னிலை வகித்தார். உதவி பொறியாளர் கிருஷ்ணன் வரவேற்றார். செயற்பொறியாளர்கள் ராமச்சந்திரன், விஜயஈஸ்வரன் ஆகியோர், மின் பாதுகாப்பை வலியுறுத்தி பேசினர்.
உதவி பொறியாளர்கள் வினோத்குமார், சோமசுந்தரம் உட்பட பொறியாளர்ள், வருவாய் பிரிவு பணியாளர்கள் பங்கேற்றனர்.