/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேரோட்டத்தில் பாரம்பரிய முறைப்படி யானை: ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
/
தேரோட்டத்தில் பாரம்பரிய முறைப்படி யானை: ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
தேரோட்டத்தில் பாரம்பரிய முறைப்படி யானை: ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
தேரோட்டத்தில் பாரம்பரிய முறைப்படி யானை: ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
ADDED : ஏப் 15, 2024 08:59 PM
உடுமலை:உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் போது, பாரம்பரிய முறைப்படி தேரை யானை கொண்டு தள்ள வேண்டும்; இயந்திரங்கள் பயன்படுத்தக்கூடாது என, ஹிந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
ஹிந்து முன்னணி சார்பில், மாவட்ட துணைத்தலைவர் ராஜேஸ் மற்றும் நிர்வாகிகள் உடுமலை கோட்டாட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:
உடுமலை நகரில், நுாற்றாண்டுகள் பழமையான, மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, 15 நாட்கள் விமர்சியாக கொண்டாடப்படுகிறது. நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி கொண்டாடும் பிரசித்தி பெற்ற விழாவாகும்.
தேரோட்டத்தின் போது, பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுப்பதும், பாரம்பரியம் மற்றும் ஆச்சாரமான முறையாக, முக்கியமான இடங்களில் தேரை யானை நகர்த்தி கொடுப்பதும் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்படுகிறது.
வரும், 25ம் தேதி நடக்கும் தேரோட்டத்தின் போது, பொக்லைன் போன்ற இயந்திரங்களை பயன்படுத்தாமல், பாரம்பரிய முறைப்படி யானை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தேரோடும் வீதிகளான, உடுமலை போலீஸ் ஸ்டேஷன் முதல், சதாசிவம் வீதி, தலைகொண்டம்மன் கோவில் வரை குறுகலாக உள்ளதால், அப்பகுதியிலுள்ள மின் கம்பங்கள் தேர் செல்வதற்கு இடையூராக உள்ளது.
கடந்த ஆண்டு, மின் கம்பங்களில் மோதி, தேரோட்டம் பல மணி நேரம் தாமதம் ஆனது. எனவே, அதிகாரிகள் முன்னதாகவே ஆய்வு செய்து, மின் கம்பங்களை மாற்றி அமைத்து, தேரோட்டம் நடக்க உரிய முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
அதே போல், பொள்ளாச்சி ரோடு, கொல்லன் பட்டறை முதல், பழைய பஸ் ஸ்டாண்ட் வரை, ரோட்டில் மையத்தடுப்புகள், மின் விளக்குகளை, 15 நாட்களுக்கு முன்பே அகற்றி, சரி செய்ய வேண்டும்.
தேர்த்திருவிழாவில் நேர்த்திக்கடனாக, பக்தர்கள் அங்கப்பிரதட்சனம் செய்ய, கடந்தாண்டு கோவில் நிர்வாகம் இடையூறு செய்தது. நடப்பாண்டு தடையின்றி நேர்த்திக்கடன் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உபயதாரர்கள் பெயரில் முறைகேடு நடப்பதை தடுக்கவும், தேர்த்திருவிழா சமயத்தில், நகர பகுதியிலுள்ள மதுக்கடைகளை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

