/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒருங்கிணைந்த நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
/
ஒருங்கிணைந்த நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
ஒருங்கிணைந்த நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
ஒருங்கிணைந்த நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
ADDED : பிப் 28, 2025 10:51 PM
உடுமலை, ; தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த முறையில், நோய்த்தடுப்பு பணிகளை மேற்கொள்ள, தோட்டக்கலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. இச்சாகுபடியில், கடந்த சில ஆண்டுகளாக, வெள்ளை ஈ தாக்குதல், பொருளாதார சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக, இளநீர் உற்பத்திக்காக பராமரிக்கப்படும் மரங்களில், இவற்றின் தாக்குதலால், உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது.
குறிப்பிட்ட இடைவெளியில், தோட்டக்கலைத்துறை சார்பில், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
ஆனால், ஒருங்கிணைந்த முறையில், நோய்த்தடுப்பு பணிகளை மேற்கொள்ளாதது உள்ளிட்ட காரணங்களால், நடப்பு சீசனிலும், வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துள்ளது.
வரும் பருவமழை சீசனில், இவ்வகை ஈக்களின் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்ற அச்சமும் விவசாயிகளிடையே நிலவுகிறது.
விவசாயிகள் கூறுகையில், 'வெள்ளை ஈ தாக்குதல் அதிகமுள்ள பகுதிகளை தேர்ந்தெடுத்து, தோட்டக்கலைத்துறையினர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அப்பகுதியிலுள்ள விவசாயிகள் அனைவரும், ஒரே மாதிரியான நோய்த்தடுப்பு பணிகளை ஒரே சமயத்தில், பின்பற்ற, வழிகாட்டுதல் வழங்குவது அவசியமாகும். வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தாவிட்டால், தென்னை சாகுபடியின் நிலைமை பரிதாபமாகி விடும்,' என்றனர்.