ADDED : செப் 25, 2026 09:31 PM
அ நிறம் | அளவு
திருப்பூர், செப். 26–
‘பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு, 2017 ஜன. 1ம் தேதி முதல் வழங்க வேண்டிய மூன்றாவது ஊதிய மாற்றத்தை காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூர் தலைமை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு அனைத்து பி.எஸ்.என்.எல். ஊழியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குமரவேல் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் அண்ணாதுரை, முகமதுஜாபர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மாநில உதவிச் செயலாளர் அருண்குமார் நன்றி கூறினார்.
