ADDED : ஆக 22, 2024 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் அருகே சாக்கடை கால்வாய் மீது கான்கிரீட் அமைத்து உயர்த்தியதால், போக்குவரத்து நெரிசல் பல மடங்கு அதிகமாகிவிட்டது. ரோட்டின் இருபுறமும் டூவீலர்களை நிறுத்துவதால், மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்படுகிறது.
கோவில் தெற்கு வாயில் அருகே, கோவில் சுவரை ஒட்டி, மாநகராட்சி சாக்கடை கால்வாயின் மீது, கடை அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு, அவற்றை அகற்ற வேண்டும். இதேபோல், டவுன் மாரியம்மன் கோவில் முன் உள்ள ஆக்கிரமிப்பையும் அகற்ற முன்வர வேண்டும்.