தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆக்கிரமிப்பு கடைகளுக்கு கெடுவரும், 22க்குள் அகற்ற உத்தரவு 

ஆக்கிரமிப்பு கடைகளுக்கு கெடுவரும், 22க்குள் அகற்ற உத்தரவு 

ஆக்கிரமிப்பு கடைகளுக்கு கெடுவரும், 22க்குள் அகற்ற உத்தரவு 


ADDED : ஜூலை 14, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 07:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் புஷ்பா தியேட்டர் முதல் கணக்கம்பாளையம் பிரிவு வரையுள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என, கடந்த மாதம் நடந்த நெடுஞ்சாலைத் துறை மற்றும்  நுகர்வோர் அமைப்புகளின் காலாண்டு கூட்டத்தில், திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட நுகர்வோர் அமைப்பினர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, திருப்பூர் வடக்கு நெடுஞ்சாலைத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

புஷ்பா தியேட்டர் முதல் கணக்கம்பாளையம் பிரிவு வரையிலான சாலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், போக்குவரத்து நெரிசலைக் குறைத்து வாகனங்கள் தடையின்றிச் செல்லவும், விபத்துகளைத் தவிர்க்கும் வகையிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற, நெடுஞ்சாலைத்துறையினர் முடிவெடுத்துள்ளனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் குடியிருப்புவாசிகள், தங்களது ஆக்கிரமிப்புகளை வரும், 22ம் தேதி-க்குள் தாங்களாகவே முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us