/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குடிநீரின் தரம் உறுதி செய்யுங்கள்'
/
'குடிநீரின் தரம் உறுதி செய்யுங்கள்'
ADDED : ஜூன் 25, 2024 02:17 AM
திருப்பூர்;திடீர் வெயில், கருமேக கூட்டம் திரண்டு துாறல் மழை என பருவ நிலை மாறி வரும் சூழலில், தண்ணீர் மாசுபாடு காரணமாக டைபாய்டு, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து, குடிநீரின் தரத்தை மாவட்ட அளவிலான சுகாதாரக்குழு, உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.
மழைக்கால தொற்று நோய் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய்களை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிநீரில் போதிய அளவில் குளோரின் கலந்திருப்பதை உறுதி செய்வதுடன், குடிநீரில் கழிவுநீர் எந்த இடத்திலும் கலக்காமல் இருப்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். குடிநீர் மாதிரிகளை மாதந்தோறும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மழைக்காலங்களில் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சிக் குடிக்க தேவையான விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.