sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பறவைகள் சரணாலயத்தில் எதிரொலித்த சுற்றுச்சூழல் சபதம்

/

பறவைகள் சரணாலயத்தில் எதிரொலித்த சுற்றுச்சூழல் சபதம்

பறவைகள் சரணாலயத்தில் எதிரொலித்த சுற்றுச்சூழல் சபதம்

பறவைகள் சரணாலயத்தில் எதிரொலித்த சுற்றுச்சூழல் சபதம்


ADDED : ஜூன் 05, 2024 11:06 PM

Google News

ADDED : ஜூன் 05, 2024 11:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : 'சுற்றுச்சூழல் காப்பதில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும்' என, உலக சுற்றுச்சூழல் தினத்தில் மாணவர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

நேற்று, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, திருப்பூர் வனச்சரகம் சார்பில், நஞ்சராயன் பறவைகள் சரணாலயப் பகுதியில் நிகழ்ச்சி நடந்தது. வித்ய விகாஸ் வித்யாலயா, விவேகானந்தா பள்ளி, கூலிப்பாளையம் நடுநிலைப்பள்ளி மற்றும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் வரவழைக்கப்பட்டு, சுற்றுச்சூழல் தினத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.

ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவேந்திரகுமார் மீனா, தலைமை வகித்து பேசுகையில், ''இந்தாண்டின் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நில மறு சீரமைப்பு, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சி எதிர்ப்பு என்ற கருப்பொருள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, உலகம் எதிர்கொள்ளும் காலநிலை, பருவநிலை பிறழ்வு, மாசுபாடு உள்ளிட்ட பிரச்னைகளை சரி செய்ய, சுற்றுச்சூழலை ஒவ்வொருவரும் பாதுகாக்க வேண்டும்' என்பது உள்ளிட்ட கருத்துக்களை வலியுறுத்தினார்.திருப்பூர் இயற்கை கழகம், 'அறம்' அறக்கட்டளையினர், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என, 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் இருந்து, நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு, நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் வரை சென்றது. பங்கேற்ற மாணவ, மாணவியர், 'மாசுபாடு ஒழிப்போம், சுற்றுச்சூழலை காப்போம்; பிளாஸ்டிக் ஒழிப்போம், பூமியை காப்போம்; மரங்களை நடுவோம், சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துவோம்; இயற்கையை காப்போம்; எதிர்காலம் காப்போம்; நமது பூமி, நமது வீடு, நமது எதிர்காலம்' என்ற கோஷங்களை எழுப்பினர்.

பின், நஞ்சராயன் குளக்கரையில் மாவட்ட வன அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் தலைமையில், மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவைகளை உற்றுநோக்க செய்து, அவற்றின் பெயர்கள், சிறப்புகள் குறித்து மாணவ, மாணவியருக்கு விளக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us