ADDED : ஏப் 11, 2024 01:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளம், பறவைகள் சரணாலயத்துக்கு கடந்தாண்டு, ஐரோப்பிய கண்டத்தை தாயகமாக கொண்ட, 'வளைமூக்கு உல்லான்' பறவை வந்தது. குளிர்காலம் முடிந்து, கோடைக்காலம் துவங்கிய நிலையில், பிற வலசை வந்த வெளிநாட்டுப் பறவைகள் திரும்பிச் சென்றுவிட்டன. ஆனால், 'வளைமூக்கு உல்லான்' பறவை மட்டும், திரும்பிச் செல்லாமல், குளத்திலேயே உள்ளது.
திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறுகையில், ''இப்பறவையை தொடர்ந்து கண்காணிக்கிறோம்,'' என்றார்.

