/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடைக்கு தரச்சான்று வழங்கும் 'யுரோபின்ஸ்' எம்.டி.எஸ்., நிறுவனம்
/
பின்னலாடைக்கு தரச்சான்று வழங்கும் 'யுரோபின்ஸ்' எம்.டி.எஸ்., நிறுவனம்
பின்னலாடைக்கு தரச்சான்று வழங்கும் 'யுரோபின்ஸ்' எம்.டி.எஸ்., நிறுவனம்
பின்னலாடைக்கு தரச்சான்று வழங்கும் 'யுரோபின்ஸ்' எம்.டி.எஸ்., நிறுவனம்
ADDED : செப் 05, 2024 12:43 AM

திருப்பூர் : பின்னலாடைகளை பரிசோதனை செய்து, தரச்சான்றிதழ் வழங்கும், 'யுரோபின்ஸ்' நிறுவன ஸ்டாலை, முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பார்வையிட்டு, சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
திருப்பூரின் முன்னணி பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள், உற்பத்தி செய்த ஆடையின் தரத்தை உறுதிப்படுத்தி கொள்கின்றன. அதற்காக, தரச்சான்றிதழ் பெரும் வகையில், யுரோபின்ஸ் எம்.டி.எஸ்., நிறுவனத்திடம் பரிசோதனை செய்கின்றன.
இந்நிறுவனம் வழங்கும் தரச் சான்றிதழை, வெளிநாட்டு வர்த்தகர்கள் நம்பிக்கையுடன் ஏற்கின்றனர்.
பின்னலாடை துறை மட்டுமல்லாது, காலணி மற்றும் தோல், வேதி யியல் பகுப்பாய்வு, உள்ளாடைகள், விளையாட்டு உடைகள், மற்றும் அபாய கரமான ரசாயனங்களின் பூஜ்ஜிய வெளியேற்றத்திற்கான சான்றிதழ் என, அனைத்து வகையான பொருட்களின் உற்பத்தி தரம் குறித்து இந்நிறுவனம் ஆய்வு செய்து, தரச்சான்றிதழ் வழங்குகிறது.
திருப்பூர், அவிநாசி ரோடு, காந்திநகரில் இயங்கி வரும் இந்நிறுவனம், காலணி மற்றும் தோல் பொருட்களுக்கான பரிசோதனை ஆய்வகத்தை, கடந்த மாதம் துவங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சியில், தமிழக அரசின் ஜவுளித்துறை முதன்மை செயலர் தர்மேந்திரா பிரதாப் யாதவ், கண்காட்சி தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர், 'சி 7' என்ற கண்காட்சி ஸ்டாலை பார்வையிட்டனர்.
பரிசோதனை மற்றும் தரச்சான்றிதழ் வழிமுறைகள் குறித்து, செயலர் கேட்டறிந்தார். 'யுரோபின்ஸ் எம். டி. எஸ்., பரிசோதனை ஆய்வுகம் குறித்து, பிராந்திய நிர்வாக இயக்குனர் கார்த்திக்குடன் உரையாடினர்.
நிர்வாக மேம்பாட்டு மேலாளர் தேவேந்திரா நகரால் மற்றும் நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர்.