/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தண்ணீர் வந்தும் பயனில்லை... கழிவுநீர் வெளியேற வழில்லை!
/
தண்ணீர் வந்தும் பயனில்லை... கழிவுநீர் வெளியேற வழில்லை!
தண்ணீர் வந்தும் பயனில்லை... கழிவுநீர் வெளியேற வழில்லை!
தண்ணீர் வந்தும் பயனில்லை... கழிவுநீர் வெளியேற வழில்லை!
ADDED : செப் 03, 2024 01:29 AM

நடுரோட்டில் மின் கம்பம்
பல்லடம், வடுகபாளையம், எஸ்.என்.ஆர்., கார்டனில் நடுரோட்டில் மின்கம்பம் உள்ளது. இடமாற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முருகேஷ், எஸ்.என்.ஆர்., கார்டன். (படம் உண்டு)
ஆக்கிரமிப்பு அதிகம்
திருப்பூர், தென்னம்பாளையம், டி.கே.டி., மில் பஸ் ஸ்டாப்பில் போக்குவரத்து இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதுடன், ஆக்கிரமிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்.
- சுதா, தென்னம்பாளையம். (படம் உண்டு)
வீணாகும் தண்ணீர்
திருப்பூர், ஜெய்வாபாய் ஸ்கூல் ரோடு, மாநகராட்சி காம்ப்ளக்ஸ் முன்குழாய் உடைந்து தண்ணீர் தொடர்ந்து வீணாகுவது வாடிக்கையாக உள்ளது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- சத்யன், ஜெய்வாபாய் ஸ்கூல் ரோடு. (படம் உண்டு)
ரோட்டோரம் எதற்கு?
திருப்பூர், பல்லடம் ரோடு, வீரபாண்டி பிரிவில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக அகற்றப்பட்டு அறிவிப்பு பலகைகள் மீண்டும் பொருத்தப்படாமல், ரோட்டோரத்தில் அப்படியே வைக்கப்பட்டுள்ளது.
- மாணிக்கம், வீரபாண்டி. (படம் உண்டு)
வீணாகும் தண்ணீர்
திருப்பூர், ஐந்தாவது வார்டு, எஸ்.ஆர்.வி., நகரில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலை சேறும், சகதியுமாக மாறுகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- சந்திரன், எஸ்.ஆர்.வி., நகர். (படம் உண்டு)
குழியை மூட வேண்டும்
குன்னத்துார் பேரூராட்சி, 5வது வார்டு, ஈஸ்வரன் கோவில் அருகில் தரைப்பாலம் சேதமாகி, ஓட்டை விழுந்துள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் வாய்ப்புள்ளது.
- முருகேசன், குன்னத்துார். (படம் உண்டு)
முட்புதர் அகற்றலாமே!
குன்னத்துார் குளத்துக்கு அத்திக்கடவு - அவிநாசி தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. குட்டையை சுற்றிலும், கருவேல மரங்கள், முட்புதர் மண்டி இருப்பதால், தண்ணீர் வந்தும் பிரயோஜனம் இல்லை.
- முருகேசன், செங்காளிபாளையம். (படம் உண்டு)
பல்லாங்குழி சாலை
திருப்பூர், ஸ்ரீ விக்னேஸ்வரா நகர், 7வது வீதியில் குண்டும் குழியுமாக தார் பெயர்ந்த நிலையில், வாகன ஓட்டிகள் சென்று வர சிரமமாக உள்ளது.
- சித்ரா, ஸ்ரீ விக்னேஸ்வரா நகர். (படம் உண்டு)
திருப்பூர், 53வது வார்டு, வீரபாண்டி குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டது. பணி முடிந்து குழி மூடிய பின், பேட்ஜ்ஒர்க் மேற்கொள்ளவில்லை. அப்படியே விட்டுள்ளனர்.
- செல்லத்துரை, வீரபாண்டி. (படம் உண்டு)
ரோடு போடுங்க...
திருப்பூர், 59வது வார்டு, தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் இருந்து சேரன் தொழிலாளர் காலனி, கிருஷ்ணா நகர் செல்லும் ரோடு, மண் தேங்கி, மழைநீர் தேங்குகிறது. தார் ரோடு போட வேண்டும்.
- மதியழகன், சேரன் தொழிலாளி காலனி. (படம் உண்டு)
அவிநாசி - தெக்கலுார் இணைப்பு, கவுசிகா நதி அருகே கட்டப்பட்டுள்ள பாலத்தில் தார் ரோடு போட வேண்டும். வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர்.
- தங்கராஜ், சூரிபாளையம். (படம் உண்டு)
இருள் சூழந்த வீதி
திருப்பூர், வீரபாண்டியில் இருந்து கல்லாங்காடு செல்லும் ரோட்டில் கூடுதலாக தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். இருள்சூழ்ந்து காணப்படுகிறது. பாதசாரிகள் பயத்துடன் சென்று திரும்புகின்றனர்.
- செல்வராஜ், கல்லாங்காடு. (படம் உண்டு)
கால்வாய் அடைப்பு
திருப்பூர், நெசவாளர் காலனி, மாரியம்மன் கோவில் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேற வழியின்றி அப்படியே தேங்கியுள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.
- ராஜன், நெசவாளர் காலனி. (படம் உண்டு)
---------------------------
ரியாக் ஷன்
தற்காலிக சீரமைப்பு
திருப்பூர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவில் ரோடு குண்டும் குழியுமாக இருந்தது. 'தினமலர்' செய்திக்கு பின், தற்காலிகமாக மண் கொட்டி சீரமைத்துள்ளனர்.- வரதராஜன், ராக்கியாபாளையம். (படம் உண்டு)
குழியை மூடிட்டாங்க...
திருப்பூர், பூலுவபட்டி பிரிவு நால்ரோடு சந்திப்பு வளைவில் சாலை குழியாக உள்ளது குறித்து, 'தினமலர்' செய்திக்கு பின், குழியை மூடி, ரோடு போட்டுள்ளனர்.
- முரளி, பூலுவபட்டி. (படம் உண்டு)