/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்க கூட்டம்
/
முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்க கூட்டம்
ADDED : ஜூலை 02, 2024 02:12 AM
உடுமலை:உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்க கூட்டம் நடந்தது.
உடுமலையில் முன்னாள் ராணுவ நல சங்க கூட்டம் லெப்டினென்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது. சங்கத்தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.
முன்னாள் ராணுவ வீரர்கள் நாயப் சுபேதார் நடராஜ், மோகன், சரவணன், முன்னிலை வகித்தனர்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்ற, முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்க பொருளாளர் சிவகுமார், முன்னாள் ராணுவ வீரர் பிரகாஷ் வெற்றி பெற்றுள்ளனர்.
சங்கத்தின் சார்பில், தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு, நினைவு பரிசு வழங்கப்பட்டது. சங்க உறுப்பினர்கள் பலரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.