/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்வு வாரியம் பாராட்டு திருப்பூர் டாக்டருக்கு கவுரவம்
/
தேர்வு வாரியம் பாராட்டு திருப்பூர் டாக்டருக்கு கவுரவம்
தேர்வு வாரியம் பாராட்டு திருப்பூர் டாக்டருக்கு கவுரவம்
தேர்வு வாரியம் பாராட்டு திருப்பூர் டாக்டருக்கு கவுரவம்
ADDED : மே 11, 2024 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : மருத்துவக் கல்விக்கு ஆற்றிய சேவையை பாராட்டி, திருப்பூர் டாக்டர் முருகநாதனுக்கு, தேசிய தேர்வு வாரியம் பாராட்டு சான்றிதழ் வழங்கி, கவுரவித்துள்ளது.
அகில இந்திய பொது மருத்துவ ஆராய்ச்சி கிளையின் இயக்குனராக திருப்பூரைச் சேர்ந்த டாக்டர் முருகநாதன் செயல்படுகிறார். இவர் மருத்துவக் கல்விக்கு பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனை, யோசனைகளை வழங்கி வருகிறார். அவரது சேவையை பாராட்டி, டில்லியில் நடந்த தேசிய தேர்வு வாரியத்தின், 32வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. வாரிய தலைவர் டாக்டர். அபிஜித் ேஷத், பாராட்டு சான்றிதழ் வழங்கி, கவுரவித்தார்.