/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலெக்டர் ஆபீசில் கரைபுரண்ட உற்சாகம்
/
கலெக்டர் ஆபீசில் கரைபுரண்ட உற்சாகம்
ADDED : மார் 07, 2025 11:13 PM

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட சமூகநலத்துறை சார்பில், மகளிர் தின விழா, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
கலெக்டர் கிறிஸ்துராஜ், மனைவி மற்றும் மகள் குடும்பத்தினருடன் பங்கேற்றார். கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் பல்வேறு துறை சார்ந்த பெண் அரசு அலுவலர்கள் திரளானோர் ஒரே டிசைன் மற்றும் வண்ணத்தில் குழு சேலைகள் அணிந்து பங்கேற்றனர்.
மெகா கேக் வெட்டப்பட்டு, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மகளிர் தின வாழ்த்து தெரிவித்து கொண்டாடப்பட்டது. மகளிர் தின விளையாட்டு போட்டிகளில் நேற்று லெமன் ஸ்பூன், கோலப்போட்டிகள் நடத்தப்பட்டன. 2வது தளத்தில் நடந்த நிகழ்ச்சியில், சமூக நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற பெண்களுக்கு, கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார். அனைவருக்கும் மதியம் அறுசுவைவிருந்து பரிமாறப்பட்டது.