/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அழகுபடுத்த எதிர்பார்ப்பு
/
பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அழகுபடுத்த எதிர்பார்ப்பு
ADDED : மே 12, 2024 10:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலை பஸ் ஸ்டாண்ட் முன் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவை அழகுபடுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை பஸ் ஸ்டாண்ட் முன், ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் வளாகத்தில் செடிகள், செயற்கை நீரூற்றுகள் இன்றி, பொலிவிழந்து காணப்படுகிறது. நகரின் மத்தியில், நுழைவாயிலில் அமைந்துள்ள இந்த ரவுண்டானாவை அழகுபடுத்த வேண்டும். அங்கு வரும் பயணியரை கவரும் வகையில், சிறந்த வேலைப்பாடுகளை மேற்கொள்ள நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.