/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயர் மட்ட பாலம் கட்ட கிராம மக்கள் எதிர்பார்ப்பு
/
உயர் மட்ட பாலம் கட்ட கிராம மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 11, 2024 11:56 PM
உடுமலை;குடிமங்கலம் ஒன்றியம், ஆமந்தகடவு கிராமத்தில் இருந்து, அம்மாபட்டிக்கு, கிராம இணைப்பு ரோடு உள்ளது. இந்த ரோட்டில், உப்பாறு ஓடை குறுக்கிடுகிறது.
ஓடையின் குறுக்கே தரைமட்ட பாலம் மட்டுமே உள்ளது. மழைக்காலங்களிலும், உப்பாறு அணைக்கு, பி.ஏ.பி., கால்வாயில் தண்ணீர் திறக்கும் போதும், ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போது எந்த வாகனங்களும் அவ்வழியாக செல்ல முடியாது.
போக்குவரத்து துண்டிக்கப்படுவதால், இரு கிராம மக்களும் பாதிக்கப்படைகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, உப்பாறு ஓடையின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும் என இரு கிராம மக்களும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். பாலத்தின் முக்கியத்துவம் குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வாயிலாக ஆய்வு செய்து, நிதி ஒதுக்கீடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

