ADDED : ஜூன் 29, 2026 09:11 PM
உடுமலை: மடத்துக்குளம் நால்ரோட்டில், போக்குவரத்து நெரிசலை தடுக்க ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், அமைந்துள்ள மடத்துக்குளம் வழியாக மதுரை, திண்டுக்கல் உட்பட தென்மாவட்டங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள், வேன்கள், கார்கள் செல்கின்றன.
இங்கு நால்ரோடு முக்கிய நிறுத்தமாக உள்ளது. இந்த நிறுத்தத்தில் கணியூர் ரோடு, குமரலிங்கம் ரோடு, பொள்ளாச்சி ரோடு, பழநி ரோடு ஆகியவை சந்திக்கின்றன. இதனால் அங்கு வாகன போக்குவரத்து அதிகளவில் இருந்து வருகிறது.
மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, போக்குவரத்து நெருக்கடியை தடுக்கும் வகையில், மடத்துக்குளம் நால்ரோட்டில் ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
