/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மானாவாரியில் கோதுமை சாகுபடி வேளாண்துறை உதவ எதிர்பார்ப்பு
/
மானாவாரியில் கோதுமை சாகுபடி வேளாண்துறை உதவ எதிர்பார்ப்பு
மானாவாரியில் கோதுமை சாகுபடி வேளாண்துறை உதவ எதிர்பார்ப்பு
மானாவாரியில் கோதுமை சாகுபடி வேளாண்துறை உதவ எதிர்பார்ப்பு
ADDED : பிப் 28, 2025 10:50 PM
உடுமலை, ; மானாவாரியாக கோதுமை பயிரிடும் விவசாயிகளுக்கு, வேளாண்துறை சார்பில் மானியத்திட்டங்களை செயல்படுத்தினால், சாகுபடி பரப்பு, அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்துக்குட்பட்ட கணபதிபாளையம், ராகல்பாவி, வெனசப்பட்டி, பண்ணைக்கிணறு, அந்தியூர், பொட்டையம்பாளையம், விருகல்பட்டி உட்பட கிராமங்களில், கரிசல்மண் விளைநிலங்கள் உள்ளன.
இங்கு, மானாவாரியாக கொண்டைக்கடலை, கொத்தமல்லி போன்ற சாகுபடிகளில், ஊடுபயிராக கோதுமை பயிரிடப்பட்டு வந்தது. அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த சாகுபடி, பல்வேறு காரணங்களால், முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சாகுபடிக்கு பிறகும், விதைகளை சேகரித்து வைக்கும், நடைமுறை கைவிடப்பட்டது முக்கிய காரணமாகும்.
முன்பு, சம்பா கோதுமை எனப்படும் இந்த ரகம், உடுமலை பகுதியில் பரவலாக பயிரிடப்பட்டு வந்தது.
மானாவாரியாக பயிரிடப்படும் கோதுமை, விற்பனைக்கு அதிகளவு வராது. மாறாக, விவசாயிகள் தங்கள் குடும்ப தேவைக்கு விளையும் கோதுமையை பிரித்தெடுத்து பயன்படுத்தி வந்தனர்.
முன்பு வேளாண்துறை சார்பில், சிறப்பு திட்டத்தின் கீழ், கோதுமை விதைகள், வினியோகிக்கப்பட்டது. இத்திட்டத்தை வரும் ஆடிப்பட்ட சீசனில், செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
விவசாயிகள் கூறுகையில், 'மானாவாரி சாகுபடியில், கோதுமை பயிர், 105 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். கோதுமை சார்ந்த பொருட்கள் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துள்ளது. எனவே வர்த்தக ரீதியாக இச்சாகுபடியில் ஈடுபட ஆர்வமாகவே உள்ளோம். ஆனால், தேவையான விதைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் வேளாண்துறையால், வழங்கப்பட வேண்டும்', என்றனர்.