/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுகலான எலையமுத்துார் ரோடு விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு
/
குறுகலான எலையமுத்துார் ரோடு விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு
குறுகலான எலையமுத்துார் ரோடு விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு
குறுகலான எலையமுத்துார் ரோடு விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு
ADDED : மார் 06, 2025 09:42 PM
உடுமலை; எலையமுத்துார்-கல்லாபுரம் ரோட்டை விரிவுபடுத்தி, விபத்துகளை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலையில் இருந்து எலையமுத்துார் வழியாக, கல்லாபுரம் செல்லும் ரோடு, நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது. இந்த ரோட்டில், 10க்கும் அதிகமான கிராமங்களும், தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன.
வழித்தடத்தில், கல்லாபுரம் வரை, அரசு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், எலையமுத்துாரில் இருந்து கல்லாபுரம் வரை, ரோடு மிக குறுகலாக உள்ளது.
இந்த ரோட்டில் போக்குவரத்து அதிகளவில் இருந்து வருகிறது. கனரக வாகனங்கள் செல்லும் போது, பிற வாகனங்கள் விலகிச்செல்ல முடியாது; பல இடங்களில், சிறிய ஓடைகள் குறுக்கிடும் பள்ளங்களும் உள்ளன.
விவசாயம் பிரதானமாக உள்ள இப்பகுதியில் இருந்து விளைபொருட்களை சந்தைப்படுத்த, டிராக்டர் மற்றும் இதர வாகனங்களை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். குறுகலான ரோட்டில், இத்தகைய வாகனங்கள் செல்வதில் சிரமம் உள்ளது.
எனவே, ரோட்டை இருவழித்தடமாக விரிவுபடுத்த வேண்டும் என நீண்ட காலமாக அப்பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த ரோட்டில், எலையமுத்துார் அருகே, மழை நீர் ஓடைகளின் குறுக்கே இரு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. போதிய பராமரிப்பு இல்லாமல், இந்த பாலங்கள் வலுவிழந்து வருகின்றன.
இதனால், விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இப்பிரச்னைகள் குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.