ADDED : ஆக 10, 2026 08:51 PM
அ நிறம் | அளவு
பல்லடம்:
பல்லடம் அருகே சாலையோரம் குவிக்கப்பட்டிருந்த குப்பை திடீரென தீப்பிடித்ததுடன், வெடிச்சத்தம் கேட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
செம்மிபாளையம் ஊராட்சி, கே.என்.புரம்–சாமிகவுண்டம்பாளையம் சாலையோரத்தில் உள்ள குப்பை மேட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற பல்லடம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். குப்பைகளுக்குள் இருந்த பிளாஸ்டிக் மற்றும் மது பாட்டில்கள் வெடித்ததால் சத்தம் கேட்டிருக்கலாம் என தெரியவந்தது. பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
––
குப்பையில் பரவிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.
