/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏற்றுமதியாளர் சங்கம் ரூ.3 லட்சம் நிவாரணம்
/
ஏற்றுமதியாளர் சங்கம் ரூ.3 லட்சம் நிவாரணம்
ADDED : ஆக 04, 2024 05:21 AM

திருப்பூர் : வயநாடு மாவட்ட நிவாரண பணிகளுக்காக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், மூன்று லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்; அதிளவில் உயிர்ப்பலி ஏற்பட்டு, மீட்பு பணிகள் இரவு, பகலாக நடந்து கொண்டிருக்கிறது.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், நிவாரண பொருட்கள் சேகரித்து, வயநாடு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், மூன்று லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்த, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொது செயலாளர் திருக்குமரன், இணை செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர், மூன்று லட்சம் ரூபாய்க்கான காசோலையை கலெக்டரிடம் வழங்கினர்.