/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'புதிய சகாப்தம்' நோக்கி ஏற்றுமதியாளர்கள் பின்னலாடை துறையில் மறு சுழற்சி - மறு பயன்பாடு மகத்துவம்
/
'புதிய சகாப்தம்' நோக்கி ஏற்றுமதியாளர்கள் பின்னலாடை துறையில் மறு சுழற்சி - மறு பயன்பாடு மகத்துவம்
'புதிய சகாப்தம்' நோக்கி ஏற்றுமதியாளர்கள் பின்னலாடை துறையில் மறு சுழற்சி - மறு பயன்பாடு மகத்துவம்
'புதிய சகாப்தம்' நோக்கி ஏற்றுமதியாளர்கள் பின்னலாடை துறையில் மறு சுழற்சி - மறு பயன்பாடு மகத்துவம்
ADDED : பிப் 23, 2025 02:43 AM

பின்னலாடைத்துறையில் மறு சுழற்சியும், மறுபயன்பாடும் மகத்துவம் பெறுகின்றன. பனியன் துணிக்கழிவுகளில் இருந்து மறுபயன்பாட்டுக்கான மதிப்பு கூட்டப்பட்ட நுாலிழை தயாரிப்பதை சட்டப்பூர்வமாக கண்காணிக்கும் சேவையை வழங்கும், 'ரிவர்ஸ் ரிசோர்சஸ்' நிறுவனத்துடன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐரோப்பா, அமெரிக்காவில் அமலாகும் விதிமுறைகள்
உலக நாடுகள் மத்தியில், ஜவுளி மற்றும் ஆடைத்துறையின் நிலைத்தன்மையை மேம்படுத்தி, சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்த, கடும் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ஐரோப்பிய நாடுகளில் வரும் 2027-2030ம் ஆண்டுக்குள், மறுசுழற்சியுடன் கூடிய மறு பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் 'பேஷன்' சட்டத்திலும், ஜவுளி உற்பத்தி மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியில், பசுமை சார் உற்பத்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஜவுளி உற்பத்தியாளர்கள் பல்வேறு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. குறிப்பாக, உற்பத்தி கழிவு மேலாண் மையில் வெளிப்படைத்தன்மை எதிர்பார்க்கப்படுகிறது.
மறுசுழற்சி ஆவண 'சாப்ட்வேர்' சேவை
ஐரோப்பாவின், எஸ்தோனியாவை தலைமையிடமாக கொண்டு, உலகம் முழுவதும் இயங்கும் 'ரிவர்ஸ் ரிசோர்சஸ்' நிறுவனம், மறுபயன்பாட்டுடன் கூடிய மறுசுழற்சியை ஆவணப்படுத்தும், 'சாப்ட்வேர்' சேவையை வழங்குகிறது. நிலைத்தன்மை, மறுசுழற்சி விதிமுறைகளை பின்பற்றாத நாடுகள், ஐரோப்பிய சந்தைகளில் போட்டியிடுவது சவாலாக மாறியுள்ளது.
ஐரோப்பிய நாடுகள், ஜவுளிக் கழிவு தொடர்பான உத்தரவுகளை கடுமையாக்கவும் வாய்ப்புள்ளது. சீனா போன்ற நாடுகளும், ஜவுளி உற்பத்தியில் கடும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகும்.
'ரிவர்ஸ் ரிசோர்சஸ்' உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஜவுளி உற்பத்தியாளர்கள், அதன் மூலம் உருவாகும் கழிவு பொருட்களை கொள்முதல் செய்பவர்கள், அவற்றை மறுசுழற்சி முறையில் மறுபயன்பாட்டுக்கு தயார் செய்பவர்கள், மீண்டும் மூலப்பொருளாக மாற்றப்பட்டு, மதிப்பு கூட்டப்பட்ட ஜவுளி உற்பத்திக்கு பயன்படுத்தும் நிறுவனங்கள் என, அனைத்து தரப்பையும் ஒரே நேர்கோட்டில் இணைத்து, 'ரிவர்ஸ் ரிசோர்சஸ்' நிறுவனம் கண்காணிக்கும் 'சாப்ட்வேர்' உருவாக்கி கொடுக்கிறது. 'ரிவர்ஸ் ரிசோர்சஸ்' நிறுவனம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
கண்காணிப்புடன் வெளிப்படைத்தன்மை
உற்பத்தியின் போது உருவாகும் பனியன் வேஸ்ட் கழிவு, மற்றொரு நிறுவனத்துக்கு வழங்கி, மீண்டும் பஞ்சாகவும், நுாலாகவும் மாற்றப்படுகிறது.
மறுபயன்பாட்டுக்கு தயாராகும் நுால், மீண்டும் மதிப்பு கூட்டப்பட்ட ஆடையாக மாறுகிறது. இவை அனைத்தும், ஐரோப்பிய நிறுவனத்தின் 'சாப்ட்வேர்' தொழில்நுட்பத்தில் கண்காணிக்கப்படுகிறது; வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாக ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.