ADDED : ஜூலை 10, 2024 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுன்,ரோட்டரி அவிநாசி மற்றும் தி ஐ பவுண்டேஷன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் கண் கண்ணாடி வழங்கும் திட்ட நிகழ்ச்சி நடந்தது.
பூபதி முன்னிலையில், பழனிச்சாமி துவக்கி வைத்தார். அவிநாசி ரோட்டரி தலைவர் தண்டபாணி, செயலாளர் சங்கீதா, பொருளாளர் ரமேஷ், திட்ட செயலாளர் கதிர்வேலு, விஷன் ஆன் வீல்ஸ் பிராஜக்ட் சேர்மன் வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.