/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
/
பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
ADDED : ஜூலை 09, 2024 10:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்:திருப்பூர், அனுப்பர்பாளையம் புதுார், கவிதா லட்சுமி நகரிலுள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு மெட்டல் டவுன் ரோட்டரி கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் ஈஸ்வரி தலைமை வகித்தார். ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பழனிச்சாமி, ரவிச்சந்திரன், பரமேஸ்வரன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். அனுப்பர்பாளையம் பகுதி தி.மு.க., செயலாளர் ராமதாஸ், மாநகராட்சி கவுன்சிலர் சகுந்தலா பங்கேற்று பேசினர். முகாமில், 147 மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தேவைப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.